tamilnadu

img

அயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு

போபால்:
அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி விமர்சித்திருந்தார்.“உச்ச நீதிமன்றம் நாட்டின் தலைமை நீதிமன்றமாகும். அதனுடைய தீர்ப்பை தவிர்க்க முடியாது. ஆனால், அந்த தீர்ப்பில் நான் திருப்தி அடையவில்லை” என்று கூறியிருந்தார். “ஒருவேளை மசூதி அங்கேயே இருந்தால், உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுத்திருக்கும்? பாபர் மசூதி இடிக்கப் படாமல் இருந்திருந்தால் என்னதீர்ப்பு வந்திருக்கும்?” என்று கேள்விகளை எழுப்பிய ஓவைசி, “பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு, ராமர் கோயிலைக் கட்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், தனக்கு இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தின்மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும், தொடர்ந்து முஸ்லிம்களின் சட்ட உரிமைகளுக்காக போராடுவேன் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில், அயோத்தி தீர்ப்பையொட்டி ஓவைசி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பதாக, மத்தியப் பிரதேசத்தின் போபால்நகரில் உள்ள ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் பவன் குமார் என்பவர் ஓவைசி மீது புகார் அளித்துள்ளார்.

;